Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

வன்னியர்கள் முன்னேற இன்னும் 200 வருடம் காத்திருக்க முடியாது

 



"வன்னியர்கள் முன்னேற இன்னும் 200 வருடம் காத்திருக்க முடியாது!"




--------------
இந்தியாவில் தானாக சமநிலை வர இன்னமும் 7 தலைமுறைகள் ஆகும் என்கிறது World Economic Forum - Global Social Mobility Report 2020
--------------

உலக நாடுகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஆனால், அதன் பலன் எல்லா மக்களுக்கும் சரிசமமாக கிடைக்கவில்லை. சில பிரிவினர் அளவுக்கதிகமான செழிப்பை பெற்றுள்ளனர். சில பிரிவினர் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அநீதியை போக்கும் வகையில் எல்லா மக்களுக்கும் சமமான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று கோரும் "உலகளாவிய சமூக இடம்பெயர் அறிக்கையை (Global Social Mobility Report 2020)" உலக பொருளாதார மன்றம் 2020 ஜனவரி மாதம் வெளியிட்டது.

உலகின் 82 நாடுகளில் 'பெற்றோருக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் இடையேயான முன்னேற்ற வேறுபாட்டை' மதிப்பிட்டுள்ள இந்த அறிக்கையில் - இந்தியா மிகமிக கீழாக 76 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கீழ்நிலையில் இருப்போர் சராசரி நிலைக்கு தாமாக முன்னேறி வர 7 தலைமுறைகள் ஆகும் என்கிறது இந்த அறிக்கை!

"உலக பொருளாதார மன்றம்"

உலக பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF) என்பது ஜெனீவா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு ஆண்டுதோரும் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடத்தும் உலக பொருளாதார மாநாட்டில் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதை உலக நாடுகளின் தலைவர்களும் பெரும் தொழிலதிபர்களும் ஒரு மதிப்புமிக்க அங்கீகாரமாகக் கருதுகின்றனர். இந்த அமைப்புதான் உலகளாவிய சமூக இடம்பெயர் அறிக்கை 2020-யை வெளியிட்டுள்ளது

--------------
'சமூக இடம்பெயர்தல்' என்றால் என்ன?

சமூக இடம்பெயர்தல் என்பது ஒரு இடத்திலிருந்து இன்னொரு ஊருக்கு செல்வது அல்ல. மாறாக, ஒரு சமூக, பொருளாதார நிலையில் வாழ்வோர் அதிலிருந்து மாற்றமடைந்து இன்னொரு மேம்பட்ட நிலைக்கு முன்னேறி செல்லும் ஆற்றலை குறிப்பதாகும். அதாவது, சமூக இடம்பெயர்தல் (Social Mobility) என்பது ஒரு தனிநபர் அவரது பெற்றோரின் சமூக மட்டத்திலிருந்து உயர்ந்த நிலைக்கு நகரும் ஆற்றல் ஆகும்.

தனிநபர்களின் வாழ்க்கை அவர்களின் தனித்திறனை வைத்து மட்டும் அமையவில்லை. அவர்கள் பிறந்த சமுதாயத்தின் கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை தனிநபரின் உயர்வையும் தாழ்வையும் தீர்மானிக்கிறது. ஏழை பெற்றோருக்கு பிறக்கும் குழந்தை ஏழையாகவே வாழ்வதற்கும், படிக்காத பெற்றோருக்கு பிறந்த குழந்தை படிக்காதவராகவே வளர்வதற்கும் மற்றவர்களை விட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சூழலில், முன்னேறிய சாதியில் பிறந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும், வளங்களும், வசதிகளும் பின் தள்ளப்பட்ட சாதிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிடைப்பதே இல்லை.














ஏழையாக பிறக்கும் ஒருவர், ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே இறந்து போவதை சமூக இடம்பெயர்தல் "முற்றிலும் இல்லாத" நிலையாக மதிப்பிடலாம். மாறாக, ஏழையாக பிறக்கும் ஒருவர் நாட்டின் சராசரி குடும்பங்களுக்கு ஈடான வாய்ப்புகளையும் வளங்களையும் பெற்று, சமூகத்தின் மற்றவர்களைப் போல வசதியானவராக மாறுவதை சமூக இடம்பெயர்தல் "முழுவதுமாக இருக்கும்" நிலையாக மதிப்பிடலாம். இவ்வாறாக, ஒரு நிலையில் பிறக்கும் குழந்தை இன்னொரு நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகளை 'சமூக இடம்பெயர்தல்' (Social Mobility) என அழைக்கின்றனர்.

--------------
"முன்னேற்றம் அடைய 7 தலைமுறைகள் ஆகும்!"

ஒரு நாட்டின் குடிமக்களின் பிற்கால வாழ்க்கை நிலையில், அவர்களது பிறப்பின் சூழல் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மதிப்பிடும் வகையில் உலகளாவிய சமூக இடம் இடம்பெயர்தல் அறிக்கை (Global Social Mobility Report) உலக பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF) வெளியிட்டுள்ளது.

பின் தங்கிய நிலையில் உள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், முன்னேறிய நிலையில் உள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புகளின் வேறுபாட்டினை ஒப்பிட்டு, பின் தங்கியுள்ள பெற்றோரின் குழந்தை, நாட்டின் சராசரி வளர்ச்சி அளவினை எட்ட எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என கணிக்கிறது இந்த அறிக்கை 2020.

இந்த அறிக்கை, இந்தியாவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை, நாட்டின் சராசரி வருமான நிலையை அடைய 7 தலைமுறைகள் ஆகும் என மதிப்பிட்டுள்ளது. (ஒரு தலைமுறை என்பது - குழந்தை வளர்ந்து தந்தை ஆகும் கால இடைவெளியை குறிப்பதாகும்.

இந்தியாவில் இது தோராயமாக 25 முதல் 30 ஆண்டுகள்). இதனடிப்படையில் கணக்கிட்டால், தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்பட்ட நிலையில் இருக்கும் வன்னியர் சமுதாயம் நாட்டின் சராசரி நிலையை அடைய இன்னும் 200 ஆண்டுகள் ஆகும்.

--------------
'சமூக இடம்பெயர்தல்' ஏன் முக்கியமானது?

உலகம் நான்காம் தொழிற்புரட்சி காலகட்டத்தில் (Fourth Industrial Revolution) நுழைந்திருக்கிறது. பல்வேறு தொழில்களுக்கான நவீன இயந்திரங்களை உருவாக்கியதும் நீராவி மூலம் ரயில் போக்குவரத்தைத் துரிதமாக்கி தொழில்துறையின் செயல்பாட்டை வேகமாக்கியதும் முதலாம் தொழில் புரட்சி (First Industrial Revolution). மின்சாரம் வந்ததும், பெரிய பெரிய ஆலைகளை நிறுவி பெரும் உற்பத்திகள் நிகழ்ந்ததும் இரண்டாம் காலகட்டம் Second Industrial Revolution). கணிப்பொறித் துறையின் வளர்ச்சியால் இயந்திரங்களை கணினிமயமாக்கியது மூன்றாவது காலகட்டம் (Third Industrial Revolution).

தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோக்கள், முற்றிலும் தானியங்கியாகச் செயல்படும் இயந்திரங்கள் போன்வற்றின் மூலம் புதிய நான்காம் தொழிற்புரட்சி காலகட்டம் (Fourth Industrial Revolution) இயங்கத் தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த உலகமும் ஒரே பொருளாதாரமாக இயங்கும் காலமாகவும் இது இருக்கும்.

நான்காம் தொழிற்புரட்சி காலத்தில் உடல் உழைப்பை விட தொழில்நுட்ப அறிவுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். இனி மனித மூலதனம் தான் மிக முக்கியமான வளமாக இருக்கப்போகிறது. ஒரு நாட்டில் எந்த அளவுக்கு மனித வளம் மேம்பட்டதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த நாட்டின் பொருளாதாரம் செழிக்கும். வேலை செய்யும் வயதில் உள்ள எல்லா மக்களும் நல்ல ஆரோக்கியத்துடனும், முழு கல்வி பெற்றும் இருந்தால் நாடும் மிகவும் முன்னேறிய நாடாக மாறும். இதற்கு மாறாக, நாட்டு மக்களில் ஒரு சில பிரிவினரை மட்டும் பிரித்து, அவர்கள் முன்னேற வழியில்லாமல் செய்தால் அந்த நாட்டின் வளர்ச்சி தடைப்படும்.

அதாவது, சமூகத்தின் எல்லா மக்களுக்கும் வாய்ப்பளித்தால், அந்த நாடு பொருளாதாரத்தில் மேலோங்கி எழும். செழிப்பு மிக்க நாடாக மாறும். மாறாக, ஒரு சிலருக்கு மட்டும் வாய்ப்பளித்து மற்றவர்களை வஞ்சித்தால் அந்த நாடு சீரழிந்து சின்னாபின்னமாகிப் போகக் கூடும்!

இதனை அறிக்கை பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது:

"in most countries, individuals from certain groups—whether defined by gender, religion, ethnicity, race, socio-economic background or geographic location—are historically disadvantaged, and low social mobility perpetuates and deepens those inequalities. These circumstances contribute to less cohesive economies and societies, in which much human potential continues to be tragically wasted.

In the Fourth Industrial Revolution, human capital is the driving force of economic growth, and frictions that prevent the best allocation of talent and impede the accumulation of human capital may significantly limit growth. Inequalities of opportunity and low social mobility underpin such frictions, and also hinder the drivers of productivity."

--------------
"என்ன செய்ய வேண்டும்?"

இன்றைய ஏழ்மை நிலை நாளைய வாய்ப்புகளை பாதிக்கிறது. ஒரு பிரிவினரின் சமூக பொருளாதார நிலை கீழாகவும், மற்றொரு பிரிவினரின் சமூக, பொருளாதார நிலை மேலாகவும் இருப்பது கல்வி, வேலை, நாட்டின் பொருளாதாரம் என எல்லாவற்றையும் மோசமாக பாதிக்கிறது. இதனை உடனடியாக மாற்றாவிட்டால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பேராபத்துக்கு உள்ளாகும்.

“today’s outcomes shape tomorrow’s opportunities: large income gaps between today’s parents are likely to imply bigger gaps in the quality of education, or access to labour market opportunities, among tomorrow’s children and today’s circumstances will clearly affect tomorrow’s outcomes”. If nothing is done, economies risk getting locked into a vicious cycle that combines rising inequality and low social mobility

இந்த அவலத்தை மாற்ற - நலவாழ்வு, கல்வி வாய்ப்பு, கல்வி தரம், ஆயுட்காலக் கல்வி, சமூக பாதுகாப்பு, தொழில்நுட்ப நுழைவு, வேலைவாய்ப்பு, நியாயமான ஊதியம், நியாயமான வேலை சூழல், அனைவருக்குமான பொது நிறுவனங்கள் என 10 வழிமுறைகளை உலக பொருளாதார மன்றம் பரிந்துரைக்கிறது!

இனிவரும் காலத்தில் பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சியை அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்தளிக்கும் சமூக இடம்பெயர்தல், இவற்றை எல்லாம் காப்பதற்கான நீடித்திருக்கும் சுற்றுச்சூழல் ஆகினவற்றை இணைத்த கொள்கைகளை அனைத்து நாடுகளும் முன்னெடுக்க வேண்டும் (a drive for economic growth, social mobility and environmental sustainability) என வலியுறுத்துகிறது இந்த அறிக்கை.

"வேண்டும் வகுப்புவாரி உரிமை"

தமிழக சூழலில் தமிழ்நாட்டின் அனைத்து சமூகங்களுக்கும் மேற்கண்ட அனைத்திலும் சமவாய்ப்பு அளிப்பதுடன், அனைவருக்கும் இவை முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது வெறுமனே சமூகநீதிக்கான தேவை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் செழிப்பான எதிர்காலத்துக்கும் இன்றியமையாத தேவை ஆகும்.

அந்த வகையில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடும், ஒவ்வொரு சாதிக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார பங்கீடும் அளிக்கப்பட வேண்டும்.

அதாவது, வன்னியர்கள் முன்னேற இன்னும் 200 வருடம் காத்திருக்க முடியாது! இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை! வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.

அவரவர் சாதிக்கான உரிமையை அவரவர் வென்றெடுக்க வேண்டிய அவசரமான தேவை இருப்பதையே உலக பொருளாதார மன்றத்தின் சமூக இடம்பெயர் அறிக்கை 2020 சுட்டிக்காட்டுகிறது.

إرسال تعليق

0 تعليقات

Tower of Pisa History In Tamil-பைசாவின் சாய்ந்த கோபுரம்