ஆடு வளர்ப்பு
வெள்ளாடு;-
மனிதனுக்கு கரி சாப்பிடும் பழக்கம் இருக்கும்
வரை ஆட்டுக்கறி பிரியாணி பெருகிக் கொண்டே இருக்கும். இப்போதைய இந்தியாவில் விலைக்கு ஏற்ப கரி கிடைப்பதில்லை .இன்னும் பத்து வருடங்களுக்கு கோடிக்கணக்கில்
ஆடு கோழிகளை பெருக்கினால் தான் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடியும். கால்நடைகளை பற்றிய விவசாயப் பொருளாதார
வல்லுநர்கள் கணக்கு இது. இறைச்சிக்கென
வளர்க்கப்படும் கால்நடைகளில் அதிக லாபம் கொடுப்பதில் முக்கிய இடத்தில் இருப்பது
வெள்ளாடு வளர்ப்பு தான் கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றும் முக்கியமான
இடத்தில் ஆடுகள் இருப்பதால் இதை ஏடிஎம் என்கிறார்கள் வீடுகளில்.
வீடுகளில் ஆடுகள் வளர்ப்பது பண்ணை வைத்து ஆடு
வளர்ப்பது, மேய்ச்சல் முறையில் ஆடு வளர்ப்பது என்று பல
வகையில் இந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
ஆடுகளின் வகைகள்
கரி சாப்பிடுபவர்கள் வெள்ளாட்டை தான் பெரிதும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஜமுனாபாரி ,தலைச்சேரி செங்கனி, பால் கன்னி,என்று பல வகைகள் இருந்தாலும் நாட்டு ஆட்டுக்கு தான் மவுசு அதிகம். .மற்ற வகை ஆடுகள் சாதாரணமாக 30 கிலோவை தாண்டி விடும். ஆனால் நாட்டு ஆடு 20 கிலோ தான் வரும். வெள்ளாடு ஆனது எல்லாவகை தட்பவெட்ப நிலைகளிலும் வளரும் அதிலும் அறிவியல் ரீதியாக திட்டமிட்டு வளர்த்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.
பெட்டை ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் இருக்க வேண்டு
.பெரிய அளவில் வளர்ப்பவர்கள் பட்டறைகளை கட்டிக்கொள்ளலாம் தரையில் தண்ணீர் தேங்கக்கூடாது நல்ல காற்றோட்டம் இருப்பது அவசியம் அதிலேயே குட்டி ஈனுவதற்கு கட்டிகளுக்கு நோய்வாய்ப்பட்ட ஆடுகளை எனக்கு என்று தனியாக அறையில் கட்டி வைப்பது நல்லது.
இனச்சேர்க்கை
ஒரு பண்ணையில் ஒரு யூனிட் என்பது 20 பெட்டை ஆடுகளையும் 1 கிடாவையும் வைத்து ஆரம்பிக்கலாம்.
பெட்டை ஆடுகள் ஒரு வருடத்திற்குள் பருவத்துக்கு வந்து விடும். ஆனால் ஒரு வயதுக்குப் பிறகு இன சேர்க்கைக்கு அனுமதித்தால் தான் தரமான குட்டிகளைப் பெற முடியும். கிடாவுக்கு 2 வயது ஆகும் போது தான் இனச்சேர்க்கைக்குபயன்படுத்த வேண்டும்.
மூன்று மாதத்துக்குள் தாயிடமிருந்து பிரித்து விடவேண்டும் நான்கு
மாதத்திலேயே கிடா பெட்டை குட்டிகளை தனித் தனியாக பிரித்தால்
தான் ஒழுங்கான இனச்சேர்க்கை செய்து குட்டிகளை பெருக்க முடியும்
குட்டி ஈன்ற ஆடுகளைப் பொருத்தவரை மூன்று மாதம் கழித்து அதனை
சேர்க்கை செய்யலாம். எட்டு மாதங்களுக்கு ஒருமுறை குட்டி போடுவது
போல் பார்த்துக் கொண்டால் தான் தீவனச்செலவு குறையும் லாபமும்
கிடைக்கும்.
வெள்ளாடுகள் எப்போதும் ஒரே மாதிரியான தீவனத்தை தொடர்ந்து
சாப்பிடாது .ஆனால் இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை தீவனங்களை
மாற்றி கொடுக்க வேண்டும் .தினமும் மூன்று
அல்லது நான்கு வகையான பசுந்தீவனம் ,அகத்தி ,சூபாபுல் வெவ்வேறு மரங்களின் இலைகள் தென்னை ஓலை
போன்றவை கூடவே பயறுவகைகள், தீவனங்களையும் ,தட்டைப்பயறு குதிரை மசால் ,வேலி மசால் ,கடலை போட்டு ,வைத்திருப்பது அவசியம்
மரங்களை தீவனங்களை காலில் மிதிபடும் சாணம்
அல்லது சிறுநீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அப்படி விழுந்தாள் அதை இந
வெள்ளாடுகள் சாப்பிடாதே
ஆடு வளர்க்க நினைப்பவர்கள் ஒரு வருடங்களுக்கு
முன்பாகவே திட்டமிட்டு ஆடுகளுக்குத் தேவையான தீவனங்கள் பயிர் செய்ய வேண்டும் .அதன் பிறகு தேடி அலைந்தால் கட்டாயம் கஷ்டம்.
ஆடு வளர்ப்பில் கவனம்
ஆடுகளின் மேல் காணப்படும் இதன் செல்கள் பேன்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த மாலத்தியான் டெல்டா , மெத்ரின் போன்ற மருந்துகளால் குளிப்பாட்டலாம் . ஆனால் சினை ஆடுகளை
நோயுற்றிருக்கும் பொழுது குளிப்பாட்டக் கூடாது
சூப்பர் சிறந்த கால்நடை தீவனம் ஆனால் அதில் சிறிதளவு நச்சுதன்மை
இருப்பதால் அதிக கொடுக்கக்கூடாது
வெள்ளாடுகளின் பருவ சுழற்சிக் காலம்
இருபத்தொரு நாட்கள். உணர்ச்சி
அறிகுறிகள் 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை தென்படும், அமைதி இல்லாமல்
கத்திக்கொண்டே இருக்கும் பக்கவாட்டில் விளையாடிக் கொண்டிருப்பது போன்றவை .
பாலுணர்ச்சி வந்த 10 மணி நேரத்திற்குள்
இனச்சேர்க்கை செய்து விடவேண்டும் .மறுநாளும் அதே
அறிகுறி இருந்தால் மீண்டும் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்
நான்காவது மாதம் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும் .பருவமழைக்கு முந்தய காலங்களில் எப்பொழுதும் கோமாரி நோய் தடுப்பூசி போட
வேண்டும். பிரசவ காலங்களில் பசுந்தீவனங்களை கம்பு சோளம்
போன்ற தீவனங்களை கொடுத்தால் பால் நன்கு சுரக்கும்.
அடர் தீவனம் தயாரிப்பு ;-
மக்காச்சோளம் கம்பு கேழ்வரகு சோளம் ஆகிய
தானியங்கள் 40% கடலை எள் தேங்காய் சூரியகாந்தி பருத்தி சோயா
ஆகிய புண்ணாக்குகள் 25%
அரிசி மற்றும் கோதுமை தவிடு30% தாது உப்பு 2% உப்புக்க ஊட்டச்சத்து கலவை 1% அளவில் எடுத்துக்
கொண்டு மாவாக தண்ணீரில் பிசைந்து தினமும் குறிப்பிட்ட விகிதத்தில் கொடுக்கவேண்டும் கர்ப்பிணி
ஆடுகளுக்கு கொஞ்சம்
அதிகப்படியாக கொடுக்கலாம்
0 Comments